உலகம்

டெக்ஸாஸ் மாகாணத்தை உலுக்கி எடுத்த சூறாவளி புயல்

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய பெரில் சூறாவளி புயல் மெக்சிகோவையும் உலுக்கி எடுத்து டெக்ஸாஸ் மாகாணத்தில் கரையை கடந்தது. இதனால் பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக 2.7 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டெக்ஸாஸ் மாகணத்தில் புயல் மற்றும் மழை‌ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பறக்கும் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது