உலகம்

காரை பழுது பார்க்க 17 லட்சம் கேட்டதால்...ஆத்திரத்தில் காரை கொழுத்திய நபர்.... 

அதிக பணம் கொடுத்து காரை பழுது பார்ப்பதா என 30 கிலோ வெடிமருந்தை காரில் வைத்து அதன் உரிமையாளர் வெடித்துள்ளார்

Malaimurasu Seithigal TV

பின்லாந்தில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் இருந்து வருகிறது.இந்த நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் கார் ஒன்றை அதன் உரிமையாளர் ஒருவர் வெடிவைத்து தகர்க்கும் வீடியோ வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.தெற்கு பின்லாந்தின் கிம்மென்லாக்சோ என்ற இடத்தில்  இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது..

டூமாஸ் காட்டைனேன் என்பவர் தனக்கு சொந்தமான டெஸ்லா காரை கடந்த சில தினங்களுக்கு முன் பழுது பார்ப்பதற்காக ஒரு நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார்.அவர் காரை ஒப்படைத்த சில தினங்களில் அந்நிறுவனத்தில் இருந்து அவருக்கு வந்த அழைப்பில் பழுது பார்ப்பதற்காக 17 லட்ச ரூபாய் தருமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த பணத்தின் மதிப்பை கண்டு அதிச்சியடைந்த உரிமையாளர் 17 லட்ச ரூபாய் கொடுத்து சரிபார்பதற்கு பதிலாக 30 கிலோ வெடிபொருளை வாங்கி காரினுள் வைத்து வெடித்தது காட்சிகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த காரின் உரிமையாளர் டூமாஸ் காட்டைனேன் கூறிய போது, நான் டெஸ்லாவை வாங்கிய போது முதல் 1500 கிலோமீட்டர் வரை நன்றாக ஓடியாதாக தெரிவித்தார்.பின்னர் அவை சரியாக இயங்காததால் அதனை பழுது பார்க்கும் நிறுவனத்தில் ஒப்படைத்ததாக கூறினார்.இதில் ஒரு மாத காலமாக கார் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முழு பேட்டரி செல்லையும் மாற்றுவதே காரை சரிசெய்வதற்கான ஒரே வழியாக கருதிய நிலையில் அதற்காக 17 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்தது தொடர்ந்து அவர் தனது காரை அங்கிருந்து எடுத்து வந்ததாக கூறினார்.அதன் பின் அவர் தனது காரை வெடிக்க முடிவு செய்து அதனை வெடி வைத்து வெடித்ததாக அவர் கூறியுள்ளார்.இந்த காரை அவர் வெடிக்க வைத்த வீடியோ இணையத்தில் பதிவு செய்த நிலையில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.