உலகம்

குழந்தைக்கு அபூர்வ உடல் குறைப்பாடு!வயிற்றுக்கு வெளியே வளரும் உடல் உறுப்புகள்!

கேஸ்ட்ரோசைஸிஸ் என்னும் பிறவி குறைப்பாடு காரணமாக பிறந்த குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது

Malaimurasu Seithigal TV

கேஸ்ட்ரோசைஸிஸ் எனப்படும் பிறவி குறைபாடு என்பது ஒரு குழந்தையானது அதன் தாயின் கருவறையில் வளரும் போது குழந்தையின்  முன்புற உடல் சுவர் ஒன்றாக இணைக்க தவறிவிடும் நிலை ஏற்படுவதாகவும் இதனால் வயிற்று பகுதியின் தோல் முழுமையாக வளராமல் இருக்கும் எனவும்,உடலின் அந்த பகுதி சரியாக மூடப்படாததால் தொப்புளுக்கு வலதுபக்க உறுப்புகள் வளர வளர உடலில் இருந்து வெளியேற ஆரம்பிப்பதன் மூலம் இந்த பாதிப்பு ஏற்படக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

இந்த வகையான குழந்தைகளை பிறந்தவுடன் இன்குபேட்டரில் வைக்கப்பட்டது.இக்குழந்தைக்கு பிறந்த ஒரு வாரத்திற்கு உணவு எதுவும் கொடுக்கப்படாமல் முதல் மூன்று வாரங்களாக மருத்துவமனையிலேயே வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.குழந்தையின் உடலுக்கு வெளியே வந்துள்ள உறுப்புகள் அதிக வெப்பம் ஆகாமலும் மற்றும் அவை காய்ந்து போகாமலும் இருக்க குழந்தியினை மருத்துவர்கள் பாதுகாப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்த குழந்தையானது பிறந்து ஐந்து வாரங்கள் ஆன நிலையில் இதற்கு கோயா என பெயரிடப்பட்டுள்ளது.ஹவாய் மொழியில் கோயா என்றால் போராளி என்பது அர்த்தமாக உள்ளது என கருதுகின்றனர்.

பிரிட்டனின் கிரேட் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வந்துள்ள 29 வயதான ஆஸ்லி கருவுற்ற நிலையில் பன்னிரெண்டு வாரங்கள் கழித்து மருத்துவர்களால் சொல்லப்பட்ட இந்த செய்தியை கேட்டு அப்பெண் அதிர்ச்சியடைந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.தற்போது குழந்தை பிறந்த நிலையில் அவை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.