உலகம்

தேவதையை போல வந்து பயணியின் உயிரை காப்பாற்றிய இந்தியர்!!!

Malaimurasu Seithigal TV

லண்டனில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்ற ஒருவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது.  அதன் பிறகு டாக்டர் விஸ்வராஜ் வெமலா ஒரு தேவதை போல தோன்றி பல முயற்சிகளுக்குப் பிறகு அவரது உயிரைக் காப்பாற்றினார்.

லண்டனில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  இதையடுத்து அங்கிருந்த அனைவரும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். இதற்கிடையில், ஒரு இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் தக்க நேரத்தில் தேவதை போல வந்து, பல போராட்டங்களுக்குப் பிறகு அவரது உயிரைக் காப்பாற்றினார். விமான பயணத்தின் போது அந்த நபருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

ஊடகச் செய்திகளின்படி, பர்மிங்காமில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் விஸ்வராஜ் வெமலா (48), அவரது தாயுடன் இந்தியாவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​சக பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  அப்போது நாடித்துடிப்பு சரியாக வேலை செய்யாமல் மூச்சு விட முடியாமல் தவித்த பயணியை உயிர்ப்பிக்க வெமலா முயன்றார்.  அவரது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட வெமலா, அவரை மீட்டெடுக்க ஒரு மணிநேரம் எடுத்ததாகவும், அவரை முழு சுயநினைவுக்கு கொண்டு வர சுமார் ஐந்து மணி நேர முயற்சி எடுத்ததாகவும் கூறியுள்ளார். 

-நப்பசலையார்