மராட்டிய மாநிலம் மும்பை நகரத்தை சேர்ந்தவர் அபவாலி.இவருக்கு ஒரு மனைவி உள்ளார்.மேலும் அபவாலி மதுபழக்கத்திற்கு அடிமையாகி சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.அவரது மனைவி கடந்த 2016 ஆம் ஆண்டன்று பழைய டிவியை வாங்கியுள்ளார்.அதனை கடை ஊழியரும் அவரது வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்ததாக கூறுகின்றனர்.அதன்பின் டிவிக்கான தொகையினை கடைகாரர் கேட்கவே இவர் பணத்தை எடுத்த தர முற்பட்ட போது வைத்திருந்த அறையில் பல மாதன்ங்களாக அவர் சேர்த்து வைக்கப்பட்டு இருந்த பணத்தினை கணவர் எடுத்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்ந்த அவர் தான் சேமித்து வைத்திருந்த பணத்தினை எனது கணவர் எடுத்து சூதாடிவிட்டதாக டிவி எடுத்து வந்த ஊழியரிடம் தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதனிடையே இருவருக்கும் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலைக்கு தள்ளப்பட்ட போது அவரது கணவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தியுள்ளார்.கத்திக்குத்துக்கு ஆளான அவர் ரத்த வெள்ளத்தில் இருந்ததோடு இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மனைவியை கத்தியால் குத்தி கொன்ற அபவாலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்த கொலை வழக்கு மும்பை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.இதனை தொடர்ந்து மனைவியை கொன்ற கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தது.