துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நிலநடுக்கம்:
கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7 புள்ளி 8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியும், அண்டை நாடான சிரியாவும் குலுங்கின. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில நிமிடங்களில் குடியிருப்புகள் உள்பட பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின.
தற்காலிக குடியிருப்புகள்:
இதன் காரணமாக துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில், நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு தற்காலிக முகாம்கள், மருத்துவ முகாம்களை அமைத்து அவர்களை தங்க வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பாதிப்படைந்த சிரியா:
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவமனைகள் இல்லாததால், அங்கு நிலைமை மோசமாக காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
உதவிக்கரம்:
மேலும், மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறு நாடுகளால் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மீட்பு படையினர் துருக்கிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிரியாவில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த நிலையிலும், 7 வயது சிறுமி தனது சகோதரனை பத்திரமாக ஒன்றரை நாளாக பாதுகாத்து வந்த வீடியோ, கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது
இடிபாடுகளில்..:
இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோா் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. பெரும் கான்கிரீட் சிலாப்களை அகற்றி உயிருக்குப் போராடுவோரை மீட்கும் பணி 4ஆவது நாளாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
உயிரிழப்பு:
அந்தவகையில், தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 9 ஆயிரத்து 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 2 ஆயிரத்து 992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.