உலகம்

அதிகார மோதல் - பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள தலிபான் தலைவர் முல்லா பரதர்

ஆப்கானிஸ்தனின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள தலிபான்களின் முக்கிய தலைவரான முல்லா பரதர் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஆப்கானிஸ்தனின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள தலிபான்களின் முக்கிய தலைவரான முல்லா பரதர் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த மாதம் தலிபான்கள் தலைமையிலான அரசு அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய ஆட்சி அமைய தாமதமாகி வருகிறது. தலிபான்களுக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. தலிபான் மற்றும் ஹக்கானி பிரிவினருக்கு இடையே இந்த அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனை பிடிக்கும் போது ஒற்றுமையாக செயல்பட்ட இந்த இரு பிரிவுகளும் தற்போது அதிகாரத்திற்காக சண்டையிட்டு கொள்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  தலிபான் தலைவர் முல்லா பரதர், ஹக்கானி படை பிரிவினரால் பினைகைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான்களின் ஆன்மீகத் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.