தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு முழு முயற்சியுடன் செயற்படுகின்றது என இலங்கை வர்த்தக அமைச்சர் வியாளேந்திரன் கூறியுள்ளார்.
மியான்மர் அரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 ஆண்டுகால சர்வதேச நட்புறவை முன்னிட்டு, மியான்மர் குடியரசில் இருந்து சுமார் 1000 மெட்ரிக் தொன் அரிசியை நேற்று கொழும்பு துறைமுக வளாகத்தில் வைத்துப் பெற்றுக்கொண்டார் வர்த்தக அமைச்சர் எஸ்.வியாளேந்திரன்.
வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் எஸ். டி கொடிகார மற்றும் மியன்மார் அரசாங்க தூதரகத்தின் தூதுவர் ஹான் து மற்றும் உணவு ஆணையாளர் ரு உபுல் அல்விஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.