உலகம்

உண்பதற்கும்,குடிப்பதற்கும் மட்டுமே முதுகலை பட்டம் அளிக்கும் பல்கலைகழகம்!!

எங்கும் இல்லதா சட்டம் பிரான்ஸ் நாட்டில் அறிமுகமாகி அனைவரின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

Malaimurasu Seithigal TV

பண்பாட்டுகளை நினைவு கூறும் வகையில் பல பட்டப்படிப்புகள் இருந்து வரும் சூழலில் பிரான்சில் புகழ்பெற்ற பல்கலைகழகம் ஒன்றில் அறிமுகப்படுத்தியுள்ளது விநோதமான பட்டப்படிப்பாகவே கருதலாம்.இந்த பட்டப்படிப்பானது அனைவரின் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவதாகவும் இதனை படிக்க யாரும் மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.பிரான்சில் மதிப்புமிக்க அரசியல் மற்றும் அறிவியல் பள்ளிகளில் ஒன்றாக இருந்து வரும் சயின்சஸ் போ லில்லில் எனப்படும் பல்கலைகழகத்தில் BMW என்ற பட்டப்படிப்பானது உண்பதையும்,குடிப்பதையும் பழக்கமாக வைத்து வாழ்க்கையை நன்கு வாழ்ந்து வரும் சிலருக்கு உகந்ததாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

இந்த  BMW என்ற முதுகலை பட்டப்படிப்பானது கேட்பதற்கு நப்ப கூடிய வகையில் இல்லையென்றாலும் இவையே உண்மை என கருதுகின்றனர்.மேலும் BMW என்பதனை 'போயர்(boire), மேங்கர்( manger), விவ்ரே(vivre)' சுருக்கமாக கூறப்படுகிறது.இந்த பட்டப்படிப்பில் உணவு வகைகள் குறித்தும் மது பானங்கள் பற்றியும் வாழ்க்கையை குறிக்கும் வகையில் பாடங்கள் அமைந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.இந்த படிப்பானது  gastro-diplomacy யினை சார்ந்ததாகவும், பாலின பாகுபாடுகள் குறித்து விளக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Benôit Lengaigne என்னும் விரிவுரையாளர் தனித்துவமிக்க சில பாடங்களை கற்பித்து வருவதாக சொல்லப்படுகிறது.இவர் இதனை பற்றிய கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமிக்கவராக இருந்து வருகிறார்.மேலும் இந்த பட்டப்படிப்பு தொடர்பாக சக மாணவர்களிடம் கலந்துரையாடிய பொழுது அவர்கள் கேலி செய்யும் வகையில் சிரித்ததாக கூறினார். மேலும் இந்த பட்டப்படிப்பினை அறிமுகப்படுத்தியது தொடர்ந்து மாணவர்களிடையில் ஆர்வத்தினை தூண்டியதாக சொல்லப்படுகிறது.

இந்த உணவு சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பானது அவசர உலகத்தில் உணவுக்கு சவாலாக இருக்கும் எனவும் அதன் முக்கியதுவத்தை அனைவரின் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த படிப்பு மிகவும் உறுதியாக இருக்கும் என மாணவர் ஒருவர் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.