உலகம்

ஒமிக்ரானை ஓரம் தள்ளி முன்னுக்கு வந்த புதிய வகை IHU மாறுபாடு..இதுவரை 12 பேர் பாதிப்பு..

ஒமிக்ரான் மாறுபட்டை தொடர்ந்து தற்போது விஞ்ஞானிகள் கண்டறியப்பட்டுள்ள புதியவகை IHU மாறுபாடு.

Malaimurasu Seithigal TV

கோவிட் 19 தொற்றுநோயின் மற்றொரு புதிய மாறுபாடாக IHU மாறுபாட்டை விஞ்ஞானிகள் கண்டறிந்த நிலையில் டிசம்பர் 10 அன்று முதலில் உறுதி செய்யப்பட்டதாக கூடுதல் தகவல்களாக தெரிவித்தனர்.இது குறித்து உலக சுகாதார அமைப்பானது புதிய வகை மாறுபாட்டிற்கு பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.இருப்பினும் இந்த வகையான மாறுபாடு பிரான்சில் மார்செய்ல்ஸ் அருகே இதுவரை சுமார் 12 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் உறுமாறிய படி வந்து கொண்டிருக்கும் தொற்றுகளை கண்டு அஞ்சி வரும் சூழலில் பிரான்சில் உள்ள விஞ்ஞானிகள் ஒமிக்ரானை விட அதிக பாதிப்புகள் தரக்கூடிய வகையில் இருக்கும் மாறுபாட்டை கண்டறிந்து இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய வகை மாறுபாடனது ஒமிக்ரானை விட அதிக அளவில் பரவக்கூடும் எனவும் இதற்கு அதிக எதிர்ப்புத் திறன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இந்த புதிய வகை மாறுபாட்டிற்கு ஆளான 12 பேரும் ஆப்பிரிக்க நாடான கேமரூன் என்ற இடத்திற்கு பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பெரும்பாலான இடங்களில் ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மற்றொரு பக்கம் இந்த புதிய வகை மாறுபாட்டின் அச்சுறுத்தலும் அதிகரிக்க தொடங்கியதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.

இந்த புதிய வகை மாறுபாடு மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை எனவும் இந்த மாறுபாட்டிற்கு தகுந்த பெயரினை உலக சுகாதார அமைப்பு வைக்கவில்லை என தெரியப்படுத்தியுள்ளனர்.இது குறித்து தொற்று நோயின் நிபுணரான எரிக் ஃபீகல்-டிங் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் புதிய மாறுபாடுகள் தொடர்ந்து வெளிவருவதால் ஆபத்து என்பது அர்த்தமில்லை எனவும் ஒரு மாறுபாடு அதிக அளவில் பெருகுவது என்பதற்கு காரணமாக அசல் வைரஸ்களுடன் தொடர்புடைய பிறழ்வுகளின் எண்ணிக்கையாக இருக்கலாம் எனவும் இதனால் பெரிதாக ஆபத்துகள் நேரிட வாய்ப்புகள் இல்லை என பதிவிட்டுள்ளார்.