உலகம்

ரஷ்ய அதிபர் புதினுக்கு ரத்த புற்றுநோய்? - பிரிட்டன் முன்னாள் உளவாளி பகீர் தகவல்!

Tamil Selvi Selvakumar

ரஷ்ய அதிபர் புதின் ரத்த புற்றுநோய்க்கு ஆளாகி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக பிரிட்டன் முன்னாள் உளவாளி வெளியிட்டுள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த பிரபல பிரிட்டன் முன்னாள் உளவாளி கிறிஸ்டோபர் ஸ்டீல் கூறுகையில், சமீபத்தில் கிடைத்த தகவல்கள்படி விளாடிமிர் புதின் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நோயானது எந்தகட்டத்தில் உள்ளது என்றும் இதனை குணப்படுத்த முடியுமா அல்லது முடியாதா என்ற விவரம் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, கிறிஸ்டோபர் கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அப்போதைய அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே நட்பு நீடித்ததாகவும் டிரம்புக்கு சாதகமாக தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க புதின் உதவியதாகவும் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.