உலகம்

போதைப் பொருளில் இருந்து கஞ்சா நீக்கம்...இனி கஞ்சா தோசை, கஞ்சா வடை, கஞ்சா டீ கிடைக்கும்! தாய்லாந்து அதிரடி அறிவிப்பு

போதைப் பொருளில் இருந்து கஞ்சா நீக்கம், கஞ்சா வழக்கில் கைதானோர் விடுதலை என தாய்லாந்து நாடு அடுத்தடுத்து அதிரடி காட்டி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tamil Selvi Selvakumar

விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் கஞ்சாவை போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்கி, அதன் விற்பனையை தாய்லாந்து அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

இதையடுத்து கஞ்சா விற்பனை  கடைகளில் இளைஞர்கள் கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது. சட்டத்தின் நீட்சியாக, கஞ்சா வழக்கில் தண்டனை பெற்ற  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சட்டப்பூர்வ கஞ்சா விற்பனைக்கு அனுமதி அளித்த முதல் ஆசிய நாடாக தாய்லாந்து இடம்பிடித்துள்ளது.

ஆனால் இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், கஞ்சாவை உணவு அல்லது பானங்களில் கலந்து மட்டுமே பயன்படுத்தலாம். புகைப்பது குற்றம். அதனால் என்ன, கஞ்சா தோசை, கஞ்சா வடை, கஞ்சா டீ சாப்பிடலாம்...