உலகம்

ஆசியான் மாநாட்டில் உலக தலைவர்களை சந்தித்த ராஜ்நாத்சிங்!!!

Malaimurasu Seithigal TV

கம்போடியா:  கம்போடியாவில் நடைபெறவுள்ள இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  சீம் ரீப் சென்றடைந்தார்.

நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கம்போடியாவில் உள்ள சீம் ரீப் சென்றடைந்துள்ளார்.   அங்கு சென்ற அவர் முதலில் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸைச் சந்தித்து பேசினார். 

சந்திப்பின் போது பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், இந்தியா-ஆஸ்திரேலியா ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பல முக்கிய விஷயங்களை விவாதித்ததாக இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.  இந்த சந்திப்புக்குப் பிறகு ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டினையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

1992 ஆம் ஆண்டு முதல்: 

இந்தியா 1992 ஆம் ஆண்டு முதல் ஆசியான் அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. முதல் ஆசியான் மாநாடு வியட்நாமின் ஹனோயில் அக்டோபர் 12, 2010 அன்று நடைபெற்றது.  2017 முதல், ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடி, ஆசியான் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்து வருகின்றனர். 

ஆசியான் நாடுகள்:

ஆசியானின் 10 நாடுகளில் இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், புருனே, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கம்போடியா, மலேசியா மற்றும் மியான்மர் ஆகியவை அடங்கும். 

-நப்பசலையார்