உலகம்

நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த போராட்ட காரர்கள்....

பழங்குடியினரின் இறையாண்மைக்காக இத்தகைய வன்முறைகள் நடைபெறுவது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Malaimurasu Seithigal TV

ஆஸ்திரேலிய பகுதியில் நாட்டில் உள்ள பழங்குடியினர்களுக்கா தொடரப்பட்ட போராட்டத்தில் நேற்று அங்குள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு போராட்ட காரர்கள் தீயினை வைத்து உள்ளனர்.இதில் கட்டிடத்தின் முன்பக்க கதவுகள் எரிந்து சாம்பல் ஆகி உள்ளன.

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தீயினை அனைத்துள்ளனர்.இதில் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என தெரிகிறது.பழைய நாடளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவம் குறித்து பிரதமர் ஸ்காட் மோரீசன் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஆஸ்திரேலியா இப்படி செயல்படுவதில்லை. இந்த நாட்டின் ஜனநாயக சின்னத்தை ஆஸ்திரேலியர்கள் வந்து தீயிட்டு கொளுத்துவதை பார்க்கும் நடத்தை எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. திகைத்துப்போய் நிற்கிறேன்” என குறிப்பிட்டார்.

இந்த தீ வைப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த கட்டிடத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.நாடாளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்டதை அரசு தரப்பு எம்.பி.க்கள் கடுமையாக சாடினர். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அவர்கள் குறிப்பிட்டனர்.