உலகம்

ஒரு நாள் பயணமாக கிரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ராணுவ வரவேற்பு...!

Malaimurasu Seithigal TV

ஒரு நாள் பயணமாக கிரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, கடந்த 22ம் தேதி பங்கேற்றார். தொடர்ந்து தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் கலந்துகொண்டார். இதையடுத்து ஜோகன்னஸ்பெர்க்கில் இருந்து கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றடைந்தார். அப்போது ஏதன்ஸ் விமான நிலையத்தில்  கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் வரவேற்றார். 

இதைத்தொடர்ந்து இந்திய வம்சாவளியினரை சந்திப்பதற்காக கிராண்ட் பிரேடாக்னே ஓட்டலுக்கு பிரதமர் சென்றார். அப்போது பிரதமருக்கு மலர் கிரீடம் மற்றும் மாலை அணிவித்து இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து மேளங்கள் கொட்டப்பட்டதை மகிழ்வுடன் கண்டுகளித்த பிரதமர் மோடி, சிறுவர்களிடம் உற்சாகமாக உரையாடினார்.

இதையடுத்து கிரீஸ் பிரதமர் கிரியாகோஸுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடவுள்ளார். இப்பயணத்தின் மூலம் 40 ஆண்டுகளில் கிரீஸ் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.