ஆஸ்திரிலியாவில் நடைபெற்ற காகித ராக்கெட் விடும் நூதன போட்டியில், பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். கடந்த 14 ஆம் தேதி சால்ஸ்பர்க்கில் ரெட் புல்ஸ் ஹாங்கர் 7 எனப்படும் காகித ராக்கெட்டுகள் விடும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், பாகிஸ்தானை சேர்ந்த ரானா முகம்மது என்பவர் அதிக நேரமாக 14 விநாடிகள் காகித ராக்கெட்டை பறக்க விட்டு சாதனை படைத்தார்.
அதேபோல், செர்பியாவை சேர்ந்த லாசர் க்ரிஸ்டிக் என்பவர் அதிக தூரமாக 61 மீட்டர் பறக்கவிட்டார். ராக்கெட்டின் கட்டமைப்பு மற்றும் திறன் அடிப்படையில் போட்டி நடந்ததால், தென் கொரியாவைச் சேர்ந்த செயிங்கூன் என்பவர் 46 புள்ளிகள் பெற்று போட்டியில் முதலிடத்தை வென்றார்.