எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் அணு ஆயுத வல்லமைக் கொண்ட படைப்பிரிவு தாயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது.
அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா அணு ஆயுதங்களை சோதனை செய்து மிரட்டல் விடுத்து வருகிறது. அண்மையில் அணு ஆயுத பயன்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்த வடகொரியா, அமெரிக்கா - தென்கொரியா மற்றும் ஜப்பானின் கூட்டு ராணுவ பயிற்சியை எதிர்க்கும் வகையில் தொலைதூர மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசி எச்சரித்தது.
இந்தநிலையில் எதிரிகளின் படைப்பிரிவு எந்த இடத்தில் நிறுவப்பட்டிருந்தாலும் அதை தாக்கி அழித்து துடைத்தெறியும் அணு ஆயுத வல்லமை கொண்ட அணு ஆயுத படைப்பிரிவு தயாராக உள்ளது என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் உயிர்பெற்ற ஸ்ட்ராம்போலி எரிமலை ...!!!