உலகம்

கேப்ரியல் புயலால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து.....

Malaimurasu Seithigal TV

நியூசிலாந்தில் கேப்ரியல் சூறாவளி காரணமாக பெய்து வரும் பரவலான மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

கடந்த சில வாரங்களாக ஆக்லாந்தில் பரவலாக பலத்த மழை பெய்து வந்தது.  இதன் காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்த நிலையில், மீண்டும் நியூசிலாந்தை அச்சுறுத்தும் விதமாக கேப்ரியல் புயலால் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. 

புயலில் குறைந்தது 46,000 வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளன. அதே போன்று நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒன்பது பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏனெனில் இன்று இரவு புயல் உச்சத்தை எட்டும் என்றும், நாளை வரை வெள்ளம் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    பாகிஸ்தானின் அமான் 2023...