உலகம்

"இந்தியாவின் கிழக்கு கொள்கைக்கு ஏசியான் ஒரு தூணாக உள்ளது" பிரதமர் மோடி!!

Malaimurasu Seithigal TV

வரலாறு மற்றும் புவியியல் அமைப்புகள் இந்தியாவையும் தென்கிழக்கு ஆசிய  நாடுகளையும் ஒன்றிணைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்ற ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர், "இந்தியா மற்றும் ஏசியான் நாடுகளின் மதிப்புகள், பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, வளம் மற்றும் பல்முனை கலாச்சாரங்கள் நமது ஒற்றுமைக்கு காரணமாக உள்ளது. இந்தியாவின் கிழக்கு கொள்கைக்கு ஏசியான் அமைப்பு ஒரு தூணாக உள்ளது. ஏசியான் இந்தியா அமைப்பின் இந்தோ பசிபிக்  விவகாரத்தில் இந்தியா ஆதரவாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் ஆசியான் இந்தியா மாநாட்டின் மையக் கரு ஆசியான் விவகாரங்கள், வளர்ச்சியின் மையம் என்று தெரிவித்த பிரதமர், உலகின் வளர்ச்சியில் ஆசியான் அமைப்பு மையமாக உள்ளதாக கூறினார். கடந்த ஆண்டு இந்தியா ஆசியான் அமைப்பின் நட்பு நாளை கொண்டாடியதாகவும், அதுவே இந்தியா ஆசியான் நட்புறவுக்கு வடிவம் கொடுத்ததாகவும் கூறினார்.