உலகம்

கம்பீரமாக நடைபயிலும் 'கிளிமூக்கு விசிறிவால் சேவல்'...!

Malaimurasu Seithigal TV

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற கிளிமூக்கு விசிறிவால் சேவல்களின் கண்காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.  இலங்கையில் முதன்முறையாக கிளிமூக்கு விசிறிவால் சேவல்களின் வளர்ப்பாளர்கள் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இந்த கண்காட்சியில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 45ற்கும் மேற்பட்ட சேவல் வளர்ப்பாளர்கள் பங்கேற்றிருந்தார்கள்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தென்னிந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்த சேவல்கள் பாரம்பரியமாக வளர்க்கப்பட்டு வந்தன.  ஆரம்பத்தில் இவைகள் சண்டை சேவல்களாக வளர்க்கப்பட்டு வந்தபோதிலும், விலங்கின ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள்.

ஆரம்பத்தில் சண்டைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தமையால் கட்டுத்தரை சேவல்கள் எனவும், அழைக்கப்பட்டன.  இதன் அலகுகள் கிளிமூக்கிற்கு இணையாக காட்சியளிப்பதனால் உருவ அமைப்பினைக்கொண்டு கிளிமூக்கு விசிவால் சேவல்கள் என இவை இலங்கையில் அழைக்கப்படுகின்றது.

இந்த சேவல்கள் 07 கிலோ நிறை வரையில் வளரக்கூடியவை என்பதுடன், சிறந்த ஆரோக்கியமாகவும், கம்பீமாகவும் காட்சிளிக்கும் தன்மை கொண்டவை.  சராசரியாக இரண்டு அடி உயரம் வரையில் வளரக்கூடியவை.  சில வீடுகளில் செல்லப்பிராணியாகவும் இவை வளர்க்கப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.