உலகம்

லிபியாவின் கூஸ்கஸ் திருவிழா.... உலக சாதனை முறியடிப்பு!!!

Malaimurasu Seithigal TV

லிபியாவில் கூஸ்கஸ் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.   லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு அருகே சப்ரதா நகரில் லிபியர்களின் பிரதான உணவான கூஸ்கஸ் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு கூஸ்கஸ் திருவிழா கொண்டாடப்படுகிறது.  

லிபியாவின் சப்ரதாவில் உள்ள சமையல்காரர்கள் மற்றும் அமைப்பாளர்கள், 5,500 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள மிகப்பெரிய கூஸ்கஸ் தயாரித்து உணவிற்கான உலக சாதனையை முறியடித்துள்ளனர்.  லிபிய உணவு வகைகளையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் நோக்கத்தில், வருடாந்திர நிகழ்வின் மூன்றாவது நாளில் "கூஸ்கஸ் தினத்தின்" ஒரு பகுதியாக இந்த மாபெரும் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.

சாதனை படைத்த உணவு பின்னர் பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வருகை தந்த நூற்றுக்கணக்கான நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் மிக்பெரிய உணவு தயாரிக்கும் பாத்திரத்தில்  2 ஆயிரத்து 500 கிலோ கூஸ்கஸ் என்ற ரவை, ஐந்து ஒட்டகங்களின் இறைச்சி மற்றும் காய்கறிகளுடன் நீராவியில் சமைக்கப்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவருக்கும் வழங்கப்படுகிறது.  அப்போது அங்கு இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

-நப்பசலையார்