உலகம்

மனிதனின் முக அமைப்பினை கொண்டு பிறந்த ஆட்டுகுட்டி!!

மனிதனை போல முகவடிவத்தோடு பிறந்த ஆட்டுகுட்டியை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

அசாம் மாநிலத்தின் கச்சார் என்ற மாவட்டத்தில் ஆடு ஒன்று ஈன்ற குட்டியானது மனிதனை போன்று முகவடிவத்தை பெற்ற நிலையில் பிறந்துள்ளது.இதனைக்கான அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

மேலும் ஆட்டிகுட்டியின் தலை பகுதி மட்டும் மனிதனின் தலையை போன்று உள்ளதால் அதனை அண்டு ஆட்டின் உரிமையாளர் மற்றும் செய்தியை அறிந்த பொதுமக்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல்கின்றனர்.இந்த வகையான குட்டிக்கு மனிதனை போன்று முக அமைப்பு இருப்பினும் காதுகள் மட்டும் ஆட்டிற்கு இருப்பதை போலவே இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த ஆட்டுகுட்டியினை வீடியோ எடுத்தும் இணையத்தில் பதிவிட்ட நிலையில் தற்போது இவை வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த சம்பவமானது அசாமில் உள்ள தோலாய் விதான் சபா தொகுதியில் இருந்து வரும் காங்காபூர் என்ற கிராமத்தில் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த ஆட்டின் உயிமையாளரான தாஸ் என்பவரின் வீட்டிற்கு ஆட்டு குட்டியை பார்ப்பதற்காகவே கூட்டம் குவிந்து வருவதாக சொல்கின்றனர்.மேலும் சிதைந்த நிலையில் பிறந்த இந்த ஆட்டுகுட்டியானது சிறிது நேரங்களில் உயிரிழந்து விட்டதாகவும் அதனை ஆட்டின் உரிமையாளரான தாஸின் நிலத்தடியில் இறந்த குட்டியினை புதைத்ததாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தாய் ஆட்டுக்குட்டி ஆனது அரோக்கியமாக இருந்து வந்ததாகவும் அதே வேளையில் மற்றொரு ஆட்டுக் குட்டியை அந்த தாய் ஆடு ஈன்றதாகவும், புதிதாக பிறக்கப்பட்ட ஆட்டுக்குட்டி நலமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.இது போன்ற நிகழ்வுகள் ஏராளம் நடந்திருக்கும் நிலையிலும் இதுவரை அதனை காண வரும் பொதுமக்கள் அதனை தெய்வீகம் என கருதி வணங்கி வருவதை வழக்கமாகவே வைத்து வருகின்றனர்.

இது குறித்து மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ஆடுகளின் மனிதக் குட்டி பிறவி என்பது குறைபாடுடைய வழக்காகும் இது பொதுவாகவே ஆடு, மாடு போன்றவற்றிற்கு இந்த வகையான பிறவி இயலாமை தோன்றுவது கரு அனாசார்தா என அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.தாயின் வயிற்றில் கரு வளரும் போதே முகம் உட்பட உடலின் பல்வேறு பாகங்களிலும் உறுப்புகளிலும் திரவம் பரவுவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.