உலகம்

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த கிம்...அப்படி என்ன எச்சரிக்கை?!!

Malaimurasu Seithigal TV

வட கொரியாவின் இராணுவ ஆட்சியாளர் கிம் ஜாங் உன், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அணுசக்தியை அதிகரிக்க அச்சுறுத்தும் அதே வேளையில், வரும் நாட்களில் வட கொரியா உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தி சக்தியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

எச்சரிக்கை விடுத்த கிம்:

வரும் நாட்களில் உலகின் சக்தி வாய்ந்த அணுசக்தி நாடாக உருவெடுப்பதே வடகொரியாவின் இறுதி இலக்கு என்று உலக நாடுகள் அனைத்திற்கும் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக  இராணுவ அதிகாரிகளையும் அதிக அளவில் ஊக்கப்படுத்தியுள்ளார்.

அணு ஆயுத சோதனை:

கிம் நாட்டின் புதிய Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனையை மேற்பார்வையிட்ட பின்னர்,  இந்த தகவலை அளித்துள்ளார்.  அரசு மற்றும் மக்களின் கண்ணியம் மற்றும் இறையாண்மையை உறுதியாகப் பாதுகாப்பதற்காக அணுசக்தி படை அமைக்கப்பட்டு வருவதாகவும், உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக மாறுவதே அதன் இறுதி இலக்கு என்றும் கிம் தெரிவித்துள்ளார். 

-நப்பசலையார்