உலகம்

அணு உலைகளில் பயங்கர ஆயுதங்களை பதுக்குகிறதா உக்ரைன்?

அணு உலைகளில் உக்ரைன் படைகள் தங்களது பயங்கரமான ஆயுதங்களை பதுக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Malaimurasu Seithigal TV

உக்ரைன் | 2022ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய உக்ரைன் - ரஷிய போர் சுமார் 10 மாதக் காலமாக தொடர்ந்து வருகிறது. உலகளவில் பெரும் தாக்கத்தை இன்று வரை ஏற்படுத்தி வரும் இந்த பெரும் போரை பல நாடுகள் எதிர்த்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, போரை முன்னடத்தி வரும் ரஷியாவை பல நாடுகள் வெளிப்படையாக எதிர்த்து வரும் நிலையில், அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகளை விதித்து ஐக்கீய நாடுகள் அறிவித்திருந்தன.

தன்னை விட 10 மடங்கு படை பலமும், பண பலமும், ஆயுத பலமும் கொண்ட நாடாக இருந்தாலும், தந்நாட்டு பொது மக்கள் உதவியுடன் படை திரட்டி உக்ரைன், தங்களது நாட்டைக் காப்பாற்ற போர் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் உதவியோடு பல வகயான ஆயுத உதவிகள் உக்ரைனுக்கு வந்தப்படி இருக்கிறது.

உக்ரைன் நாடானது, தங்களது அறிவியல் ஆய்வகங்களால் உலகளவில் பிரசித்தியானது போல, அந்நாட்டின் மற்றொரு சிறப்பு அணு உலைகள். இதனால் தான் ரஷ்யா உக்ரைனை தன் வசப்படுத்த விரும்புவதாகவும், அமெரிக்கா பயந்து கொண்டு அதனை எதிர்ப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

அப்படிக் கிடைத்த மேற்கத்திய பயங்கரமான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், உக்ரைன் தனது அணு உலைகளில் பதுக்கி வைத்து வருவதாக சில செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தகவலை ரஷ்ய வெளிநாட்டு புலனாய்வு சேவை இயக்குனர் செர்ஜி நரிஷ்கின் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆயுதங்களில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட HIMARS லாஞ்சர்களுக்கான ராக்கெட்டுகள் மற்றும் வெளிநாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளால் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் "பெரிய அளவிலான பீரங்கி குண்டுகள்" ஆகியவை அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்புக்காக உக்ரைன் ராணுவம் இதை பயன்படுத்தலாம் என்று கூறப்படும் நிலையில், இதனால் உக்ரைன் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி, போலாந்து ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட லெபர்டு 2 என்ற டாங்கிகளை உக்ரைனுக்கு மாற்ற விரும்பி ஜெர்மனியின் அனுமதியை நாடுகிறது என்றும், போலாந்திடம் இருந்து ஜெர்மனி எந்த விதமான கோரிக்கையையும் பெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல பத்திரிக்கை நிறுவனமான அல் ஜசீராவின் தரவுகள் படி, ரஷ்யா தொடர்ந்து போர் மிரட்டல்களை விட்டதால், உக்ரைன், தனது நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த ஜெர்மனில் உருவான லெப்ர்டு 2 டாங்கிகளை அமெரிக்கா மற்றும் தனக்கு உதவி செய்யும் நாடுகளிடம் கேட்டதாகவும், ஆனால், அதற்கு அதிகாரப்பூர்வமான எந்த ஒரு ஒப்பந்தங்களும் போடப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.