உலகம்

"இந்தியர்கள் கனடா பயணத்தை தவிர்க்கவும்" - மத்திய அரசு

Malaimurasu Seithigal TV

காலிஸ்தான் தீவிரவாதி விவகாரம் தொடர்பாக கனடா, இந்தியா நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

தீவிரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவின் பேரில் இந்தியத் தூதர் வெளியேற்றப்பட்டார்.

இதன் எதிரொலியாக கனடா தூதரை 5 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் கனடாவில் இந்திய விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் கனடாவுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்ப்பதோடு அந்நாட்டுவாழ் இந்திய மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 இதனைத் தொடர்ந்து,  தூதர்கள் வெளியேற்ற விவகாரம் எதிரொலியாக கனடா பாடகர் சுப்னீத் சிங்கின் இந்திய மேடைநிகழ்ச்சி ரத்து செய்யப்படுள்ளது.  இந்நிலையில் பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த சுப்னீத் சிங்கின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், இதற்கான டிக்கெட் தொகையை 10 நாட்களுக்குள் திருப்பி அளிப்பதாக Book my show "எக்ஸ்" தளத்தில் பதிவிட்டுள்ளது.