ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருந்த காலத்தில், இந்தியா தனித்து நிற்க வேண்டிய ஒரு காலம் வந்தது. ஆனால் நம்பிய கொள்கைகளை அது கைவிடவில்லை.
ஐ.நா. அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ், ”எந்த சூழ்நிலையிலும் இந்தியா தனது கொள்கைகளில் இருந்து பின்வாங்காது” எனக் கூறியுள்ளார்.
பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய காம்போஜ், ”2021-22ல் ஐ.நா அவையின் நிரந்தர உறுப்பினராக இருந்த காலத்தில், இந்தியா தனித்து நிற்க வேண்டிய ஒரு காலம் வந்தது. ஆனால் இந்தியா அது நம்பிய கொள்கைகளை ஒருபோதும் கைவிடவில்லை.” எனத் தெரிவித்துள்ளார். மேலும் ”கடந்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஆதரவாகப் பேசியுள்ளோம். பயங்கரவாதம் போன்ற மனித குலத்திற்கு பொதுவான எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப தயங்க வேண்டாம்” எனவும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: கொரோனா...பிரதமரின் சிறப்பான ஏற்பாடுகள்...பாராட்டிய அமைச்சர்!!!