உலகம்

"பாகிஸ்தானுடன் இயல்பான உறவுகளை இந்தியா விரும்புகிறது" பிரதமர் நரேந்திர மோடி! 

Malaimurasu Seithigal TV

பாகிஸ்தானுடன் இயல்பான இருதரப்பு உறவுகளை இந்தியா விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து  ஜப்பான் சென்றடைந்தார்.

இந்நிலையில் அங்குள்ள தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர், பயங்கரவாதம் இல்லாத சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், சீனாவுடனான இயல்பான இருதரப்பு உறவுகளுக்கு எல்லைப் பகுதிகளில் அமைதியும் அவசியம் என்றும் இந்தியா சீனா உறவின் எதிர்கால வளர்ச்சி பரஸ்பர மரியாதை, இருநாட்டின் நலன்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.