உலகம்

ரஷ்யா உக்ரைனை விட தரவரிசையில் பின்தங்கிய இந்தியா...!!!

Malaimurasu Seithigal TV

உலக மகிழ்ச்சிக்கான நாடுகளின் தர வரிசைப் பட்டியலில் 6 வது முறையாக பின்லாந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 

உலக மகிழ்ச்சி தினம்:

உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி  மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில்  இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.  இந்நிலையில், இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.  

எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?:

இந்த அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பு வெளியிட்டு வருகிறது.  ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சமூக நிலை, தனிநபர் சுதந்திரம் , ஊழல்களின் அளவு ஆகிய காரணிகளை கொண்டு மகிழ்ச்சியின் அளவு கணக்கிடப்படுகிறது.  

முதலிடத்தில்:

இந்தப் பட்டியல் கடந்த 10 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த பட்டியலை ஐ. நா. வெளியிடுகிறது.  அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள 146 நாடுகள் கொண்ட பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. பின்லாந்து கடந்த ஐந்து வருடமாகவே இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மகிழ்ச்சியில் பின் தங்கும் இந்தியா:

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா எப்போதும் பின்னடைவையே சந்தித்து வருகிறது.  இம்முறை வெளியிட்ட பட்டியலில் இந்தியாவுக்கு 126 ஆம் இடம் கிடைத்துள்ளது. 

ரஷ்யா மற்றும் உக்ரைன்:

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தாலும், உலக மகிழ்ச்சி அறிக்கையில் இரு நாடுகளும் இந்தியாவை விட உயர்ந்த இடத்தில் உள்ளன.  அதாவது ரஷ்யா 70 வது இடத்திலும், உக்ரைன் 92 வது இடத்திலும் உள்ளன. 

பின்தங்கிய நாடு:  

கணக்கெடுக்கப்பட்ட 137 நாடுகளில் ஆப்கானிஸ்தானை மிகக் குறைவான மகிழ்ச்சியான நாடாக உலக மகிழ்ச்சி அறிக்கை தரவரிசைப்படுத்தியுள்ளது. 

-நப்பசலையார்