உலகம்

இந்தியா பாகிஸ்தானை இணைக்க போகிறதா அமெரிக்கா...எப்படி?!!

Malaimurasu Seithigal TV

இந்தியாவுடன் உலகளாவிய கூட்டாண்மை கொண்டுள்ளோம்.  பாகிஸ்தானுடனும் ஆழமான கூட்டாண்மை உள்ளது.  இரு நாடுகளுடனும் நாங்கள் உறவு வைத்துள்ளோம்.

முன்வந்த அமெரிக்கா:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை நாட்டு மக்களின் நலன் சார்ந்ததாக இருக்கும் எனவும் அவர்கள் இருவருடனுமான எங்களது உறவு வெற்றிடமானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார் நெட் பிரைஸ்.  

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போரை நாங்கள் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். 

ஆழமான உறவு:

இந்தியாவுடன் உலகளாவிய  கூட்டாண்மை கொண்டுள்ளோம் என்று தெரிவித்ததோடு பாகிஸ்தானுடனான ஆழமான கூட்டாண்மை குறித்தும் அவர் பேசியுள்ளார்.  

செய்தியாளர் சந்திப்பில் பேசிய நெட் பிரைஸ் இரு நாடுகளுடனும் நாங்கள் உறவு வைத்துள்ளோம் எனவும் அதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உரையாடலை நாங்கள் விரும்புகிறோம் எனவும் அவர் தெரிவித்ததோடு இது பாகிஸ்தான் மற்றும் இந்திய மக்களின் நலன் சார்ந்ததாக மட்டுமே 
இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.  

அதோடு நில்லாமல் இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு இன்றியமையாதவை எனவும் ஒன்றாக நாம் நிறைய செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்