உலகம்

"நான் மோடியின் ரசிகன்" எலான் மஸ்க் புகழாரம்!

Malaimurasu Seithigal TV

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் தானென்று டெஸ்லா தலைவர் எலான்  மஸ்க் புகழாரம் சூட்டியுள்ளார். 

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனி விமானம் மூலம் அமொிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அரசின் முக்கிய தலைவா்கள் பிரதமா் மோடியை வரவேற்றனா். மேலும் அமொிக்க வாழ் இந்தியா்கள் வழி நெடுகிலும் காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பில் வெள்ளை மாளிகையில் நடக்கும் விருந்தில் கலந்துகொள்ள உள்ள அவர், நாடாளுமன்ற கூட்டு உரையாற்ற உள்ளார். இதற்கிடையில் அமெரிக்காவில் வாழும் பல்வேறு ஆளுமைகளையும் தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து வருகிறார்.  

இதன் ஒரு அங்கமாக பிரதமர் மோடி பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பின் பேசிய எலான் மஸ்க், தான் மோடியின் ரசிகன் என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா மீது மோடி மிகவும் அக்கறை காட்டுவதாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய மோடி வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எலான் மஸ்க்கை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சயடைந்தாக கூறியுள்ளார். மேலும், ஆற்றல் முதல் ஆன்மீகம் வரையிலான பிரச்சனைகளில் நாங்கள் பலதரப்பட்ட உரையாடல்களைக் கொண்டிருந்தோம் எனவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.