உலகம்

வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ள முன்னாள் பிரதமர்!!!

Malaimurasu Seithigal TV

ஊழல் விவகாரத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்  தலைவர் நவாஸ் ஷெரீப்புடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டுப் பேசியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.

மோடியை பாராட்டிய இம்ரான்:

இந்தியாவை இம்ரான் கான் புகழ்வது இது முதல் முறையல்ல. முன்னதாக, அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவைப் பாராட்டிய இம்ரான் கான், ”சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் உதவியுடன் தனது அரசும் அதே காரியத்தில் செயல்பட்டது என்றும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைமையிலான அரசாங்கம் ’தலை இல்லாத கோழியைப் போல ஓடுகிறது’ , பொருளாதாரம் பின்னடைவில் உள்ளது" என்றும் விமர்சித்துள்ளார். 

"குவாட்டின் ஒரு பகுதியாக இந்தியா இருந்தபோதிலும்,  அமெரிக்காவிடமிருந்து வந்த அழுத்தத்தைத் தாங்கி, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடியில் எண்ணெயை வாங்கியது.  சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் உதவியுடன் அரசாங்கம் இதை சாதிக்க முயற்சிக்கிறது" என்று இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார். 

"நாமும் இந்தியாவும் ஒன்றாக சுதந்திரம் பெற்றோம், ஆனால் பாகிஸ்தான் ஒரு டிஷ்யூ பேப்பராகப் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறது," என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் ”அமெரிக்கவிடமிருந்து எதிர்ப்பு இல்லை என்றாலும், வெளிநாட்டு சதி ’எங்கள் இறையாண்மை மீதான தாக்குதல்’ என்று தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரிஃப் மீதான விமர்சனம்:

உலகில் நவாஸை தவிர வேறு எந்த தலைவருக்கும் வெளிநாட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இல்லை” என்று இம்ரான் கான் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

மேலும்” நாட்டிற்கு வெளியே கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் ஒரு நாட்டின் பிரதமர் அல்லது தலைவர்பற்றி என்னிடம் சொல்லுங்கள். நமது அண்டை நாட்டில் கூட, இந்தியாவுக்கு வெளியே பிரதமர் மோடிக்கு எத்தனை கோடி சொத்துக்கள் உள்ளன?" என பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இம்ரான் கான் கேள்வியெழுப்பியுள்ளார்.

"வெளிநாட்டில் நவாஸ் எவ்வளவு சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கிறார் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது" என்று இம்ரான் கான் மேலும் கூறியுள்ளார்.

இந்திய மக்கள் குறித்து:

"இந்தியர்கள் ’குதர் குவாம்’ (மிகவும் சுயமரியாதையுள்ள மக்கள்). எந்த வல்லரசும் இந்தியாவிற்கு விதிமுறைகளை ஆணையிட முடியாது," என்றும் மக்களிடம் பேசியபோது கூறியிருந்தார்.

டிஷ்யூ பேப்பர்:

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து சுதந்திரம் பெற்றதாகவும் ஆனால் இஸ்லாமாபாத் டிஷ்யூ பேப்பராக பயன்படுத்தப்படுவதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.