உலகம்

உலகை மீண்டும் அச்சுறுத்தும் எபோலா..!!!

Malaimurasu Seithigal TV

உகாண்டா தலைநகரில் பதிவாகிய 11 புதிய எபோலா வழக்குகள. தகவலை வெளியிட்ட உகாண்டாவின் சுகாதார அமைச்சர் ஜேன் ரூத் அசெங்.

உகாண்டாவில் எபோலா நோய் வேகமாக வளர்ந்து வருவதாக ஆப்பிரிக்காவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். செப்டம்பர் 20 முதல், உகாண்டாவில் 75 எபோலா வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தற்போது வரை 28 இறப்புகள் பதிவாகியுள்ளன. 19 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது சவாலான நிலையாக தற்போது பார்க்கப்படுகிறது.

ஆப்பிரிக்காவிற்கான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையத்தின் தகவலின் படி,  உகாண்டா சுகாதார அதிகாரிகள்  எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட 1,800 க்கும் மேற்பட்டவர்களில் தொற்றுநோயை உறுதிப்படுத்தியுள்ளனர். 

-நப்பசலையார்