உலகம்

கோமாவில் இருந்த பெண்ணுக்கு வயாகரா கொடுத்தே உயிரை காப்பாற்றிய மருத்துவர்!!!

உடல் நிலை மோசமடைய தொடங்கிய பெண் ஒருவருக்கு மருத்துவர் செய்த செயல் அனைவரின் மத்தியில் பாராட்டத்தக்கதாக உள்ளது.

Malaimurasu Seithigal TV

பிரிட்டன் நாட்டில் மருத்துவர் ஒருவர் இளம் பெண்ணின் உடல் நிலையை சீராக்குவதற்காக எடுத்த முயற்சியை கண்டு அனைவரும் வியப்படைந்து வருகின்றனர். இது குறித்து பல கருத்துக்கள் வெளிவந்த நிலையில் மருத்துவ உலகில் சில சமயங்களில் யாரும் எதிர்பார்க்காத அதிசியங்கள் நடக்கும் எனவும் சில சமயம் படுகாயம் அடைந்த நபர் உயிர் பிழைப்பாரா என்ற கேள்விக்குறிய நிலையிலும் சிலர் உயிர் பிழைப்பது இதனிடையில் சிறு காயமே அடைந்திருப்பார்கள் அவர்கள் உயிரிழக்க கூடும் எனவும் தெரிவித்தனர்.

பிரிட்டன் நாட்டில் சுமார் 28 நாட்களாக பெண் ஒருவர் கோமாவில் இருந்து வருகிறார்.அந்த பெண்ணுக்கு திடீரென உடல்நிலை மிகவும் மோசமடைய தொடங்கிய போது மருத்துவரின் திடீர் முடிவால் வயாகரா கொடுத்து மட்டுமே அந்த பெண்ணை உயிர் பிழைக்க செய்துள்ளார்.கடந்த இரு வருட காலமாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா மெல்ல குறைய தொடங்கிய நிலையில் தற்போது ஒமிக்ரான் தொடங்கி பாதிப்புகளை அதிகபடுத்தி வருகிறது.மேலும் வயாகரா பற்றி மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில்,இங்கிலாந்தை சேர்ந்த 37 வயதான மோனிகா என்ற பெண்மணி அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த நிலையில் அவரை கொரோனா தாக்கியதாக சொல்லப்படுகிறது.

மேலும் அந்த பெண்ணின் உடல் மிகவும் மோசமடைந்த நிலையில் அவரது உறவினர்கள் அவரின் நிலையை கண்டு கவலை கொண்டனர்.இதற்கிடையில் அந்த பெண்ணிற்கு வயாகரா தொடர்ந்து அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பெண் உயிர் பிழைத்த சம்பவம் மருத்துவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சமயத்தில் அவரது உடல் சீராக உள்ளதா என மருத்துவர்கள் தொடர்ந்த பரிசோதனையில் அவருக்கு அதிக அளவில் வயாகரா மாத்திரைகளை கொடுக்கப்பட்டு வந்தது தற்போது அவரின் உயிரை காப்பாற்றியது என தெரிவித்தனர்.

மேலும் அந்த செவிலியர் நான் உயிர் பிழைத்தது எவ்வாறு சாத்தியம் என்ன நடந்தது என அவரே ஆச்சரியத்தில் பல கேள்விகளை எழுப்ப மருத்துவர்கள் அவரது கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்துள்ளனர்.