உலகம்

வடகொரியாவிடம் தோற்றதா தென்கொரியா...பொறுப்பற்ற அரசாங்கமே காரணம்!!!

Malaimurasu Seithigal TV

அதிபர் யோல் அமைச்சரவையுடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.  கூட்டத்தில் பேசுகையில், கடந்த பல ஆண்டுகளாக ராணுவத்தின் தயார்நிலை மற்றும் பயிற்சியின்மையை இது காட்டுகிறது.  இதிலிருந்து ராணுவத்திற்கு அதிக ஆயத்தமும் பயிற்சியும் தேவை என்பது தெளிவாகிறது.

நிபுணத்துவம் வாய்ந்த ராணுவம்:

வட கொரியாவின் சமீபத்திய ட்ரோன் தாக்குதல்கள் சியோலின் வான் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.  இதற்கிடையில், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் ட்ரோன்களில் நிபுணத்துவம் வாய்ந்த இராணுவக் குழுவை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.  இதற்கு ஒரு நாள் முன்பு, தென் கொரியாவின் எல்லைப் பகுதிக்குள் வடகொரியாவின் 5 ஆளில்லா விமானங்கள் நுழைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

வீழ்த்த முடியாத பலம்:

அண்டை நாடான வட கொரியாவின் ட்ரோன்கள் தலைநகர் சியோல் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இந்த வாரத்தின் தொடக்கம் முதலே தொடர்ந்து சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதற்கு பதிலடியாக தென் கொரியா 100 சுற்றுகள் சுட்டாலும் எந்த ஆளில்லா விமானத்தையும் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்னும் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

ஆலோசனை கூட்டம்:

அதிபர் யோல் பின்னர் அமைச்சரவையுடன் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்.   அந்த கூட்டத்தில் அவர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக ராணுவத்தின் தயார்நிலை மற்றும் பயிற்சியின்மையை இது காட்டுகிறது எனவும் இதிலிருந்து ராணுவத்திற்கு அதிக ஆயத்தமும் பயிற்சியும் தேவை என்பது தெளிவாகிறது எனவும் கூறியுள்ளார்.  இதற்கு முன்னைய அரசாங்கங்களே காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

-நப்பசலையார்