உலகம்

”கடைசி உணவு” என குறிப்பிட்டு உணவு ஆர்டர் செய்த நபரின் உயிரை காப்பாற்றிய டெலிவரி பணியாளர்!

என் வாழ்வின் கடைசி உணவு என குறிபிட்டு உணவு  ஆர்டர் செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற வாடிக்கையாளரின் உயிரை உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் உயிரை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சீனாவின் ஹெனான் மாகாணத்தைன் சேர்ந்த நபர் ஒருவர் என் வாழ் நாளில் கடைசி உணவு இது என குறிபிட்டு ஆர்டர் செய்துள்ளார்.உணவினை டெலிவரி செய்யும் நபர் அவரின் வீட்டின் அழைப்பு மணிக்கு யாரும் பதிலளிக்கவும் இல்லை வீட்டின் கதவையும் திறக்காத நிலையில் சந்தேகமடைந்த டெலிவரி செய்யும் நபர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்த போதும் அந்த வாடிக்கையாளர் கதவை திரந்து வெளியே வராத நிலையில் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற அதிகாரிகள் அவரது அறைக்குள் சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.

அந்த வாடிக்கையாளரின் உயிரை காப்பாற்ற உதவிய டெலிவரி செய்யும் நபரின் விரைவான சிந்தனைக்கு போலீசார் நன்றி தெரிவித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அந்த வாடிக்கையாளர் 60 தூக்க மாத்திரைகளை உட்கொணடதாக கூறப்படுகிறது.அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுள்ளது.`

இந்த சம்பவத்தில் உணவை டெலிவரி செய்யும் நபர்கள் உணவை மட்டும் டெலிவரி செய்து வராமல் மனிதாபிமிக்க  செயலின் அடிப்படையில் வாடிக்கையாளரின் உயிரை காப்பாற்றிய அந்நபருக்கு சமூக வலைதள பக்கங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.