உலகம்

ரஷ்யா அமெரிக்கா இடையே தொடரும் பதற்றம்...!!!

Malaimurasu Seithigal TV

ரஷ்யா தனது விமானத்தை பாதுகாப்பாகவும் சரியாகவும் இயக்க வேண்டும்.  ஆளில்லா விமானத்தை வீழ்த்திய சம்பவம் ரஷ்யாவின் அலட்சியம் மற்றும் தவறான அணுகுமுறை.

அதிகரிக்கும் பதற்றம்:

அமெரிக்க ராணுவ உளவு விமானத்தை ரஷ்ய போர் விமானம் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.  இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சருக்கும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் தொலைபேசி உரையாடலும் நடந்துள்ளது.  அந்த உரையாடலில், அமெரிக்கா உளவு பார்ப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சர்வதேச சட்டம் அனுமதிக்கும் வரை, அமெரிக்க விமானங்கள் அங்கு பறக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.  ரஷ்யா தனது விமானங்களை எச்சரிக்கையுடன் இயக்குமாறும் அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நடந்தது என்ன?:

போர் விமானம் மோதியதில் அமெரிக்காவின் ராணுவ உளவு விமானம் சேதமடைந்து கடலில் விழுந்தது.  ரஷ்யா வேண்டுமென்றே தனது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதுடன் அதிருப்தியும் தெரிவித்தது.  அதே நேரத்தில், இது ஒரு விபத்து என்று ரஷ்யா கூறியதுடன் அமெரிக்கா ஆத்திரமூட்டுவதாகவும் குற்றம் சாட்டியது.

-நப்பசலையார்