உலகம்

உக்ரைனுக்கு தொடரும் உதவிகள்... சிறுத்தையை அனுப்பிய நார்வே!!

Malaimurasu Seithigal TV

நார்வே நாட்டில் இருந்து உக்ரைனுக்கு சிறுத்தை 2 ரக பீரங்கிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.  இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன.  போர் தொடுத்த ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களும் மாண்டு போயுள்ளனர்.

ஆனாலும் தாக்குதல் நடத்துவதில் சிறிதும் பின்வாங்காத ரஷியா, தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாடும், அதன் பங்குக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  இதற்காக இரு நாடுகளுக்கும் உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. 

அதன்படி, உக்ரைன் ராணுவ வீரர்கள் பயன்பாட்டிற்காக 8 சிறுத்தை- 2 ரக பீரங்கிகள் நார்வே நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.  இவற்றை கீவ் நகரில் உள்ள உக்ரைன் ராணுவம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.  

-நப்பசலையார்