லிஸ் ட்ரஸ்ஸின் பதவி விலகலுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் 42 வயதான சுனக் வெற்றி பெற்றுள்ளார். ஒரு இந்தியராக இங்கிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியர் இவரே ஆவார்.
மேலும் தெரிந்துகொள்க: லிஸ் ட்ரஸ்ஸின் அரசியல் நெருக்கடிக்கான முக்கியமான காரணங்களும் விளக்கங்களும்!!
இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவரது மாமனாரும் இன்ஃபோசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் , 'அவரைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன், அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், 'வாழ்த்துக்கள் ரிஷி, நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம், நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம்' என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷி. நீங்கள் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கும் போது, உலகளாவிய பிரச்சினைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்றவும், சாலை வரைபடம் 2030 திட்டத்தை செயல்படுத்துவீர்கள் எனவும் நான் எதிர்பார்க்கிறேன். நமது வரலாற்று உறவுகளை நவீன கூட்டாண்மையாக மாற்றியமைக்கும் இவ்வேளையில், இங்கிலாந்தில் வாழும் பாலமாக இருக்கும் இந்தியர்களுக்கு சிறப்பான தீபாவளி வாழ்த்துகள்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பொருளாதார சிக்கலில் இருந்து இங்கிலாந்தை மீட்க ரிஷி சுனக் விரைவில் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். இந்த நாட்களில் இங்கிலாந்து பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. இதன் காரணமாகவே, லிஸ் ட்ரஸ் அவரது பிரதமர் பதவியை 45 நாட்களில் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
தற்போது அவருக்கு பதிலாக இந்தியா வம்சாவளியை சேர்ந்த சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தை பொருளாதார சிக்கலிலிருந்த் மீட்டெடுக்க என்ன செய்ய போகிறார் என்பதை உலகமே ஆர்வமாக எதிர் நோக்கியுள்ளது.