ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உலகிற்கு இது ஒரு முக்கியமான நேரம் எங்களை ஒன்றாக வைத்து இந்தியா பெரிய உலகளாவிய சேவையை செய்யும்.
இந்தியாவும்....:
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இந்தியாவைக் குறித்து பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் பொருளாதார மந்தநிலை மற்றும் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் இந்த நேரத்தில், ஜி-20 இல் இந்தியாவின் தலைமையின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. உலகில் சராசரியை விட சிறப்பாக செயல்படும் நாடுகளில் இந்தியாவும் இந்தியாவும் ஒன்று என தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா:
இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலைப் பாராட்டிய கிறிஸ்டலினா ஜார்ஜீவா பொது மற்றும் தனியார் துறையில் டிஜிட்டல் மயமாக்கலை இந்தியா எவ்வளவு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது என்பதை பார்க்க முடிகிறது எனக் கூறியுள்ளார். மேலும் ஜி 20 இன் முன்னுரிமைகளில் ஒன்று டிஜிட்டல் மயமாக்கல் எனவும் அதை எவ்வாறு ஒரு பொது தளமாக மாற்றுவது என்பது குறித்தும் இந்தியா ஆராய்கிறது என தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் வளர்ச்சியில் இந்தியா:
இந்தியா நிச்சயமாக ஆசியாவின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறிய அவர் இலங்கையும் பாகிஸ்தானும் அதன் அண்டை நாடுகள் எனவும் ஆனால் அதன் பொருளாதார வளர்ச்சி நிலையற்றவை எனவும் கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: மறைந்த முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் குறித்து பாமக தலைவர்......