உலகம்

இந்தியாவுடன் ஒப்பீடு...வெறுங்கையுடன் திரும்பிய பாகிஸ்தான்...

Malaimurasu Seithigal TV

பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெயில் 30-40 சதவீதம் தள்ளுபடி வழங்க ரஷ்யா மறுத்துவிட்டது. அப்படியொரு சலுகை வழங்கப்பட மாட்டாது என்று ரஷ்யா தெளிவாகக் கூறியதால், பாகிஸ்தான் தூதுக்குழு வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று.

பாகிஸ்தான் தூதுக்குழு: 

பாகிஸ்தானின் பெட்ரோலியத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் தலைமையிலான குழு நவம்பர் 29ஆம் தேதி ரஷ்யா சென்றது.  இந்த தூதுக்குழு நவம்பர் 30 அன்று ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மலிவான விலையில் எண்ணெய் வழங்க கோரிக்கை வைத்துள்ளது.  இந்தியாவைப் போல எண்ணெய் விலையில் 30-40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுள்ளனர். 

இந்தியாவைப் போல:

இந்தியாவைப் போன்று கச்சா எண்ணெயில் சலுகை கிடைக்கும் என எதிர்பார்த்து ரஷ்யா சென்ற பாகிஸ்தான் தூதுக்குழு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.  பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெயில் 30-40 சதவீதம் தள்ளுபடி வழங்க ரஷ்யா மறுத்துவிட்டது.  அப்படியொரு சலுகை வழங்கப்பட மாட்டாது என்று ரஷ்யா தெளிவாகக் கூறியதால், பாகிஸ்தான் தூதுக்குழு வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று.

-நப்பசலையார்