உலகம்

உலகை அச்சுறுத்தும் சீனா-ரிஷி சுனக்

Malaimurasu Seithigal TV

இங்கிலாந்தின் முன்னாள் அமைச்சரும் பிரதமர் வேட்பாளருமான ரிஷி சுனக், அவருடைய போட்டியாளரும் கட்சியின்  சக உறுப்பினருமான லிஸ் ட்ரஸ்ஸுடனான  தொலைக்காட்சி விவாதத்தின் போது  சீனா பிரிட்டனின் முக்கிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.

பிரதமர் தேர்தல்:

கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த சுனக்  மற்றும் இடையே போட்டி நிலவுகிறது.  இதில் சுமார் 1,60,000 உறுப்பினர்கள் தங்களது கட்சியின் தலைவரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க உள்ளனர். ஆகஸ்ட் வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்களிப்பைத் தொடர்ந்து வெற்றியாளர் செப்டம்பர் 5 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அச்சுறுத்தும் சீனா:

சீனாவும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த நூற்றாண்டில் பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன என்று ரிஷி சுனக் கூறியுள்ளார்.

சுனக்-ன் உறுதிமொழிகள்:

சுனக் இங்கிலாந்தில் உள்ள 30 கன்பூசியஸ் நிறுவனங்களை மூடுவதாகக் கூறியுள்ளார். அவர்கள் சீனாவின்  சக்தியை மாண்டரின் வழியாக ஊக்குவிப்பதாகக் கூறினார். இந்த நிறுவனங்கள் சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்காவில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன.

சீன சைபர் கிரைமைச் சமாளிப்பதற்கு சர்வதேச கூட்டணியை உருவாக்குவதாக சுனக் உறுதியளித்தார்.  பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் சீன தொழில்துறையை கண்காணிக்க உளவு துறையின் திறன் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். இங்கிலாந்த்தின் சொத்துக்களை கையகப்படுத்துவதைத் தடுத்து முக்கியமான  சொத்துக்களைப் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.