வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வெற்றி பெற்றுள்ளனர்.
பாதிப்புகள்:
மழை காலங்களில் இடியுடன், மின்னலும் தோன்றி வானை பிரகாசமடைய செய்யும். அந்த மின்னல் அதிக மின்னழுத்தம் கொண்டது. இதன் காரணமாக மின்சாரம் வெளிப்படும். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதுடன், கட்டடங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், மின் இணைப்புகள் மற்றும் மின்சாதனங்களில் பாதிப்பு ஏற்படுத்தி கோடிக்கணக்கான பணம் வீணாகிறது.
பாதை மாற்றியமைப்பு:
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்கில் அமைந்த சாண்டிஸ் மலை பகுதியின் உச்சியில் இருந்து மின்னலின் பாதையை மாற்றியமைத்து வெற்றி பெற்றுள்ளனர்.
நன்மைகள்:
மின்னலின் பாதையை மாற்றியமைப்பதன் மூலம் மின்னலால் ஏற்படும் பல பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சரிசெய்ய இயலும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலமாக மின்னலின் அதிக அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரமும் எதிர்காலத்தில் தயாரிக்க முடியும் எனக் கூறியுள்ளனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: கடும் குளிரால் உறைந்த ஏரி!!!