மத்திய பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டதில் அதற்கு காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 190 ஆண்டு காலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரின் மத்தியில் அட்கிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டின் போது பன்னா என்ற இடத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது வறண்ட ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.இது குறித்து நடந்த விசாரணையின் போது பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் ஓட்டுநரிடம் பேருந்தினை மெதுவாக இயக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.அதனை கண்டு கொள்ளதாக ஓட்டுநரான ஷம்சுதீன் பேருந்தினை வேகமாக இயக்கியுள்ளார்.
மேலும் இந்த விசராணையை தொடர்ந்த நிலையில் பேருந்தின் அவசர கால வழியை அடைத்து கூடுதல் இருக்கைகளை அமைத்ததும் தெரியவந்தது.இது குறித்து ஓட்டுநரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.இதையடுத்து ஓட்டுநர் ஷம்சுதீனுக்கு 19 குற்றப்பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் வீதம் 190 ஆண்டுகள் சிறை தண்டனையையும், பேருந்தின் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு இவ்வளவு ஆண்டுகால சிறை தண்டனை அளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.