உலகம்

கடல் எல்லையில் அத்துமீறும் பிரிட்டன்- பிரான்சு பரபரப்பு குற்றச்சாட்டு.!!

இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து மீன் பிடி கப்பல்களையும் தடை செய்யப்போவதாக அறிவித்த பின்னரும் பிரிட்டன் படகுகள் அத்து மீறுவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Malaimurasu Seithigal TV

இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து மீன் பிடி கப்பல்களையும் தடை செய்யப்போவதாக அறிவித்த பின்னரும் பிரிட்டன் படகுகள் அத்து மீறுவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ஐரோப்பிய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் பிரச்சனை தொடர்ந்து நீடிக்கிறது. ஒப்பந்தங்களை மீறி பிரிட்டன் அரசு செய்லபடுவதாக பிரான்சு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

பாரிசில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்சு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல், பிரான்சின் பொறுமையை பிரிட்டன் சோதித்து வருவதாகவும் அவர்கள் எந்த ஒப்பந்தத்தையும் மதிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி இருப்பதுடன், பிரிட்டனுக்கு ராணுவ படைகளின் மொழி மட்டும்தான் புரியும் என கூறியுள்ளார்.

இதனிடையே பிரான்சின் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய விவகாரத்துறை அமைச்சர் கிளமெண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.