ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்களுக்கு மன்னிப்பு வழங்க உள்ளதாக ஈரான் மதத்தலைவர் அறிவித்துள்ளார்.
தெஹ்ரான் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாஷா என்ற இளம்பெண், காவலர்கள் தாக்கியதால் காயமடைந்து உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 400-க்கும் மேற்பட்டோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கரிநாளான சுதந்திர தினநாள்...... பேரணியாக திரண்ட மாணவர்கள்!!