உலகம்

கிம்மின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க தயாராகவுள்ள அமெரிக்கா.....ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது!

Malaimurasu Seithigal TV

வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்கின் ரகசிய நடவடிக்கைகளை கண்டறிய ரூ.400 கோடி வரை செலவு செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.

அமெரிக்கா திட்டம்:

வட கொரிய ஆட்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வர அமெரிக்கா தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த தயாராக உள்ளது.   கிம் ஜாங்கின் ரகசிய நடவடிக்கைகளை கண்டறிய ரூ.400 கோடி வரை செலவு செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

ஒரு பகுதியாக..:

ஒரு பரந்த வருடாந்திர பாதுகாப்பு செலவினத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிசம்பர் பிற்பகுதியில் வட கொரிய தணிக்கை மற்றும் கண்காணிப்புச் சட்டத்தை எதிர்க்கும் ஓட்டோ வார்ம்பியர் சட்டத்திலும் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியுதவி:

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் ஏஜென்சியான ஃபார் குளோபல் மீடியா நிதியுதவி
அளிக்கும்.  

மிரட்டும் கிம்:

பல ஏவுகணைகளை ஏவி தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளை மிரட்டும் வேலையை சமீபத்தில் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் தொடங்கியுள்ளார்.  இதுமட்டுமின்றி கிம் ஜாங் அவரது ராணுவ பலத்தை வெளிப்படுத்தி அமெரிக்காவை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளார்.

ஒவ்வொரு அசைவும்:  

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிம் ஜாங்கின் ஒவ்வொரு செயலையும் ரகசியத் திட்டம் போட்டு கண்காணிக்க அமெரிக்கா இப்போது திட்டமிட்டுள்ளது.

-நப்பசலையார்