உலகம்

புத்தாண்டில் நிறுத்தப்பட்ட விமான சேவை....காரணம் என்ன?!!

Malaimurasu Seithigal TV

பாதிக்கப்பட்ட விமானங்களுக்கு பிலிப்பைன்ஸ் போக்குவரத்து செயலாளர் ஜேமி பாட்டிஸ்டா பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

விமான சேவை நிறுத்தம்:

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்நாட்டு விமான சேவையும் பன்னாட்டு விமான சேவையும் நிறுத்தப்பட்டன.  மேலும், நாட்டின் வான்வெளியில் மற்ற இடங்களுக்கு செல்வதற்கான விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. 

பயணிகள் பாதிப்பு:

மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 282 விமானங்களின் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.  மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிகையிலான விமானங்கள் நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றன.  இதனால் சுமார் 56,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

காரணம் என்ன?:

பிலிப்பைன்ஸ் போக்குவரத்து செயலாளர் ஜேமி பாட்டிஸ்டா விமானங்களை பாதித்ததற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டதோடு அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.  மின் தடை காரணமாக மத்திய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு பாதிக்கப்பட்டது எனவும் இது நாட்டின் அனைத்து விமான நிலையங்களின் செயல்பாடுகளையும் பாதித்தது எனவும் கூறியுள்ளார். 

-நப்பசலையார்