உலகம்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழவுள்ள அதிசயம்....

Malaimurasu Seithigal TV

ஐம்பதாயிரம் ஆண்டுகளில் நிகழாத அதிசயம் வானில் நிகழவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரம்:

வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வரும் வால் நட்சத்திரம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.  சூரிய குடும்பத்தின் உள் வழியாக பயணித்து வரும் இந்த வால்நட்சத்திரம் வரும் வாரங்களில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

வானில் அதிசயம்:

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2 ஆம் தேதி 42 புள்ளி 5 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் வால் நட்சத்திரம் மண்டலத்தில் இருக்கும் தூசிகள் மற்றும் துகள்களுடன் சேர்ந்து பச்சை நிறத்தில் தோன்றும் எனத் தெரிவித்துள்ளது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

-நப்பசலையார்