ஓமன் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கப்பலில் பயணித்த பணியாளர்களில் 13 பேர் இந்தியர்கள் என்றும் 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஓமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து, கடலில் முழ்கியவரைகளை தேடி வந்த நிலையில், 8 இந்தியர்கள் உள்பட 9 பேரை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டு உள்ளது. மேலும் மாயமான 5 இந்தியர்கள் உட்பட 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.