உலகம்

சொந்த வீடு வாங்கிய 6 வயது சிறுமி!! ஆச்சரியத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்!!

ஆஸ்திரேலியாவில் 6 வயதான ரூபி தனது சேமிப்பு பணம் மற்றும் தந்தை, சகோதர, சகோதரிகளின் உதவியுடன் வீட்டை வாங்கியுள்ளார். வீடு வாங்குவதை கனவாக நினைத்து வாழ்ந்து வரும் பொதுமக்களுக்கு மத்தியில் இச்சிறுமியின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

இது குறித்து வெளிவந்த தகவலில் அந்த வீட்டினை வாங்குவதற்காக சிறுமிக்கு அவரது பெற்றோர்கள் முழு பணத்தினை கொடுத்து உதவாத நிலையில் அந்த சிறுமியானவர் தனது சகோதரன் மற்றும் தந்தை உதவியுடன் தங்களுக்கான சொந்த வீட்டை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

உலகினை ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்று நோயைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பகுதியில் உள்ள முக்கிய சிட்டிகளாக கருதப்படும் மெல்போர்னின் புறநகரில் உள்ள சொத்துக்களின் விலைகள் சரியத் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலை அச்சிறுமிக்கு வீடு வாங்க பயன்படும் வகையில் இருந்துள்ளது.இதனை தொடர்ந்து அவர் அந்த வீட்டை வாங்கியுள்ளார்.

மெக்லெலன் 37 வயதான இவர் ஒரு பெரிய சொத்து வியாபாரியாக திகழ்ந்து வரும் நிலையில் கோவிட் தொற்று காரணமாக ப்ராப்பர்ட்டி மார்கெட்டில் விலைகள் சரிய தொடங்கிய போதிலும் விரைவில் விலைகள் உயர்ந்து விடும் என நம்பி வந்துள்ளார்.மேலும் அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு சேமித்து வைக்கும் பழக்கத்தை பிற்காலத்தில் உதவும் என கற்றுக்கொடுத்துள்ளார்.மேலும் சேமித்தது எதுவாக இருந்தாலும் அதனை சாமார்த்தியமாக சிந்தித்து முதலீடு செய்தல் வேண்டும் எனவும் அவரது குழந்தைகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது குழந்தைகளிடையே சொத்துக்கள் வாங்குவது குறித்தும் ஊக்குவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.இதற்காக அவர் குழந்தைகளுக்கு முழு பணத்தினையும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பணம் சம்பாதிப்பதன் முக்கியத்துவத்தை பற்றி குழந்தைகள் அறிந்து கொள்வதற்காக அவர்களின் பாக்கேட் மணியை  அதிகரிக்கும் வகையில் ஐடியா ஒன்றை தந்துள்ளார்.அதற்கெற்ப அக்குழந்தைகள் செயல்படவும் தொடங்கினர்.

இதற்காக அவர் செய்த செயல் என்பது குழந்தைகள் மூவரையும் வீடு வேலைகளில் ஈடுபடுத்த தொடங்கியுள்ளார்.அவர்கள் செய்த வேலைகேற்ப்ப மூவருக்கும் பணத்தை கொடுத்தாக சொல்லப்படுகிறது.தந்தையின் பேச்சை கேட்டு குழந்தைகளும் புத்தகங்கள் பேக்(pack) செய்வது மற்றும் வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருந்து வந்துள்ளனர்.

இப்படிப்பட்ட வேலைகளை செய்து வந்த குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்களது கையிருப்பில்  இந்திய மதிப்பில் சுமார்  4.5 லட்ச ரூபாயை பாக்கெட் மணியாக சேர்த்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குழந்தைகள் வைத்திருந்த பாக்கெட் மணியோடு ஒரு குறிபிட்ட வீட்டை வாங்க முடிவு செய்ததில் மீதம் தேவைப்பட்ட சிறிய தொகையினை கேம் மெக்லெலன் கொடுத்து தனது பிள்ளைகளின் பெயரில் ஒரு வீட்டினை வாங்கியுள்ளார்.

தற்போது இவர் வாங்கி இருக்கும் அந்த வீட்டின் மதிப்பானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறும் என கூறப்படுகிறது. தந்தையின் உதவியுடன் 6 வயதான ரூபி அவரது சகோதரர் கஸ் மற்றும் சகோதரி லூசி மெக்லெலன் ஆகியோர் தென்கிழக்கில் உள்ள க்லைடில் பெரிதாக பேசப்பட்டு வந்த வீட்டை வாங்கி சொந்தமாக்கியுள்ளன்ர்.